- இந்தோனேசியாவின்
- மாகாணம்
- மலகா
- ஜகார்த்தா
- செரம் பாகியம் பராத் ரீஜென்சி
- இந்தோனேசியா கிழக்கு மலுகு மாகாண
- தின மலர்
ஜகார்த்தா: இந்தோனேசியாவின் கிழக்கு மலுகு மாகாணத்தில் உள்ள செரம் பாகியம் பராட் ரீஜென்சிக்கு அருகில் உள்ள கடலில் 30 பயணிகளுடன் சென்ற விரைவு படகு நீரின் மேற்பரப்பில் மிதந்து கொண்டிருந்த மரத்துண்டில் மோதி கவிழ்ந்தது. இதில் 8 பேர் உயிரிழந்தனர் மற்றும் மீதமுள்ளவர்களை தேடும் பணியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து மீட்புக்குழுவின் தலைவர் முகமது அராபா கூறுகையில், உள்ளூர் நேரப்படி காலை 10 மணியளவில், படகு ரீஜென்சியில் உள்ள துறைமுகத்தில் இருந்து மாகாண தலைநகரான அம்பன் நகருக்கு புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விபத்து ஏற்பட்டது என்றார்.
துவா நோனா என்று பெயரிடப்பட்ட வேகப் படகு, உள்ளூர் நேரப்படி காலை 10 மணியளவில் சேதம் ஏற்பட்டதாகவும் கப்பல் ரீஜென்சியில் உள்ள ஒரு துறைமுகத்திலிருந்து மாகாண தலைநகரான அம்பன் நகரத்தை நோக்கிச் சென்ற சிறிது நேரத்திலேயே இந்த சம்பவம் நடந்தது.
இதில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். நீரில் மூழ்கியவர்களை தேடும் பணியில் உள்ளூர் மக்களுடன் தீயணைப்பு வீரர்களும் ஈடுபட்டுள்ளனர். காயமடைந்த அனைவரும் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு மருத்துவ சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.
The post இந்தோனேசியாவின் கிழக்கு மலுகு மாகாணத்தில் படகு கவிழ்ந்ததில் 8 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.