வாஷிங்டன்: கடந்த 2008ல் மும்பையில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் 10 பேர் புகுந்து தாக்குதல் நடத்தியதில் 166 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலில் முக்கிய மூளையாக செயல்பட்ட லஷ்கர் இ தொய்பா தீவிரவாதி டேவிட் ஹெட்லியின் கூட்டாளி பாகிஸ்தானியரான, தஹாவூர் ராணா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
ராணாவை நாடு கடத்துவதற்கு இந்தியா கோரிக்கை விடுத்தது. கீழமை நீதிமன்றங்கள் மற்றும் பெடரல் நீதிமன்றம் ராணாவை நாடு கடத்துவதற்கு அனுமதி அளித்துள்ளது. இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவதை எதிர்த்து ராணா அமெரிக்க உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். அரசின் சொலிசிட்டர் ஜெனரல் எலிசபெத் பிரிலோகர், ராணா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். தான் நாடு கடத்தப்பட்டால் ஒரே குற்றத்துக்கு 2 முறை தண்டனை பெற வேண்டிய நிலை ஏற்படும். எனவே அமெரிக்க அரசின் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று ராணா சார்பில் அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
The post இந்தியாவுக்கு நாடு கடத்தக்கூடாது; மும்பை தாக்குதல் தீவிரவாதி அமெரிக்க உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் appeared first on Dinakaran.