செஞ்சுரியனில் முதல் டெஸ்ட்: தெ.ஆ. – பாக். மோதல்

செஞ்சுரியன்: தென் ஆப்ரிக்கா சென்றுள்ள ஷான் மசூத் தலைமையிலான பாகிஸ்தான் கிரிக்கெட் அணி முதலில் எதிர்கொண்ட டி20 தொடரை இழந்தது. இருப்பினும், ஒரு நாள் தொடரை கைப்பற்றியது. இந்நிலையில், 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தென் ஆப்ரிக்காவுடன் பாக். விளையாட உள்ளது. இன்று செஞ்சுரியனில் தொடங்கும் முதல் டெஸ்ட் ‘பாக்சிங் டே’ ஆட்டமாக நடைபெற உள்ளது. ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கான தரவரிசையில் தென் ஆப்ரிக்கா முதல் இடத்தில் உள்ளது. அதன் மூலம் இறுதி ஆட்டத்தில் முதல் முறையாக விளையாடும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. இந்நிலையில் பாகிஸ்தானுக்கு எதிரான ஒரு ஆட்டத்தில் வென்றாலும் தென் ஆப்ரிக்காவுக்கு இறுதி ஆட்ட வாய்ப்பு உறுதியாகி விடும். அதனால் டெம்போ பவுமா தலைமையிலான தென் ஆப்ரிக்கா வெற்றிக்காக மல்லுக்கட்ட உள்ளது. அதேசமயம், பாக் இந்த முறையும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு முன்னேறும் வாய்ப்பு இல்லை.

The post செஞ்சுரியனில் முதல் டெஸ்ட்: தெ.ஆ. – பாக். மோதல் appeared first on Dinakaran.

Related Stories: