ஆஸ்திரலிய வீரர் சாம் கோன்ஸ்டாஸ் உடன் மோதல்: விராட் கோலிக்கு அபராதம் விதித்தது ஐசிசி!

மெல்போர்ன்: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் விராட் கோலிக்கு 20% அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் மூன்று போட்டிகளில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா தலா ஒரு வெற்றியை பெற்றன.

4வது போட்டி மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. மெல்போர்ன் டெஸ்டின் முதல் நாளில் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் ஆதிக்கம் செலுத்தினர். பாக்சிங் டே டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் 86 ஓவர்கள் நிறைவடைந்த நிலையில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 6 விக்கெட் இழப்புக்கு 311 ரன்கள் எடுத்தது.

இந்திய அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆஸ்திரேலியாவின் நான்கு தொடக்க ஆட்டக்காரர்களும் அரைசதம் அடித்தனர். சாம் கொன்ஸ்டஸ் 60 ரன்களையும், உஸ்மான் கவாஜா 57 ரன்களையும், லோபுஷேன் 72 ரன்களையும், ஸ்டீவ் ஸ்மித் ஆட்டமிழக்காமல் 68* ரன்களையும் எடுத்தனர். அலெக்ஸ் கேரி 31 ரன்கள் எடுத்தார்.

இந்நிலையில் ஆஸ்திரேலிய அறிமுக வீரர் சாம் கோன்ஸ்டாஸ் அதிரடியாக ஆடினார். குறிப்பாக அவர் பும்ராவை குறிவைத்து ரன் சேர்த்தார். பும்ராவின் 33 பந்துகளில் 34 ரன் சேர்த்தார். 10 வது ஓவரின் முடிவில் சாம் கோன்ஸ்டாஸ் நேராக நடந்து வந்து கொண்டிருந்தார்.

அப்போது கோஹ்லி, கோன்ஸ்டாஸ் மீது மோதி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதன் காரணமாக விராட் கோலிக்கு ஐசிசி அபராதம் விதித்துள்ளது. கான்ஸ்டாஸின் தோளில் விராட் கோலி மோதியதால், அவருக்கு போட்டி ஊதியத்தில் 20% அபராதமும், அபராத புள்ளியும் விதிக்கப்பட்டுள்ளது. ஐசிசி விதி 2.12ஐ விராட் கோலி மீறியதாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கோஹ்லியின் இந்த செயலுக்கு ரிக்கிபாண்டிங் கண்டனம் தெரிவித்தார். ஆனால் ரிக்கிபாண்டிங் கடந்த கடந்த காலத்தில் 19 வயதான ஹர்பஜன் சிங் மீது மோத முற்பட்டதை சுட்டிக்காட்டி ரசிகர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

The post ஆஸ்திரலிய வீரர் சாம் கோன்ஸ்டாஸ் உடன் மோதல்: விராட் கோலிக்கு அபராதம் விதித்தது ஐசிசி! appeared first on Dinakaran.

Related Stories: