ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலில் ஜோ ரூட் முதலிடம்

துபாய்: டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறந்த பேட்டிங் செய்த பேட்ஸ்மேன்கள் பட்டியலில் இங்கிலாந்தின் டெஸ்ட் ஸ்பெஷலிஸ்ட் ஜோ ரூட் முதலிடத்தில் உள்ளார். இந்த ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த பேட்ஸ்மேன்கள் பட்டியலில் இங்கிலாந்தின் ஜோ ரூட் முதலிடத்தில் உள்ளார்.

895 புள்ளிகளுடன் ஜோ ரூட் முதலிடத்திலும், 876 புள்ளிகளுடன் புரூக் இரண்டாவது இடத்திலும், 867 புள்ளிகளுடன் கேன் வில்லியம்சன் மூன்றாவது இடத்திலும், 825 புள்ளிகளுடன் டிராவிஸ் ஹெட் நான்காவது இடத்திலும், 805 புள்ளிகளுடன் ஜெய்ஸ்வால் ஐந்தாவது இடத்திலும் உள்ளனர்.

இந்த ஆண்டு 31 இன்னிங்ஸ் விளையாடியுள்ள ஜோ ரூட், 6 சதங்கள், 5 அரைசதங்களுடன் மொத்தம் 1556 ரன்கள் குவித்துள்ளார். இந்திய அணியின் தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் இரண்டாவது இடத்தில் உள்ளார். இதுவரை 27 டெஸ்ட் இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள ஜெய்ஸ்வால், மொத்தம் 1312 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 3 சதங்களும், 7 அரைசதங்களும் அடங்கும். மூன்றாவது இடத்தில் இங்கிலாந்து அணியின் பென் டக்கெட் உள்ளார். இந்த ஆண்டு 32 டெஸ்ட் இன்னிங்ஸ் விளையாடியுள்ள டக்கெட், 2 சதம், 6 அரைசதங்களுடன் மொத்தம் 1149 ரன்கள் குவித்துள்ளார்.

தற்போது இரண்டாவது இடத்தில் உள்ள ஜெய்ஸ்வால் முதலிடத்திற்கு உயர அதிக வாய்ப்புகள் உள்ளது. ஏனெனில் இங்கிலாந்துக்கு இனி டெஸ்ட் தொடர் இல்லை. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் ஜெய்ஸ்வால் 245 ரன்கள் எடுத்தால், இந்த ஆண்டு டெஸ்டில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற ஜோ ரூட் சாதனையை முறியடிப்பர். இதனால், மெல்போர்னில் நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியின் மூலம் ஜெய்ஸ்வால் எப்படி விளையாடுவார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

The post ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலில் ஜோ ரூட் முதலிடம் appeared first on Dinakaran.

Related Stories: