ஆனால் இதுதான் டெஸ்ட் கிரிக்கெட் நமக்கு கொடுக்கும் சவால். கடந்த முறை நான் இங்கு விளையாடியதை விட இம்முறை ஆடுகளம் வேகப்பந்துவீச்சுக்கு முற்றிலும் சாதகமாக இருக்கிறது. இப்படிப்பட்ட சூழலில் நாம் வித்தியாசமான அணுகு முறையை வெளிப்படுத்தி தான் ரன்கள் சேர்க்க வேண்டும்.
இதை நான் கர்வத்துடன் செய்யப் போகிறேன். இதுபோன்ற நெருக்கடியான கள சூழலை எதிர்கொண்டு அணி என்னிடமிருந்து என்ன எதிர்பார்க்கிறதோ அதை நிச்சயம் செய்வேன். இன்னும் 2 டெஸ்ட் போட்டிகள் எஞ்சி இருக்கிறது.
இதில் நான் அதிக பந்துகளை எதிர் கொண்டு களத்திற்கு உரிய மரியாதை கொடுத்து ரன்கள் சேர்க்க போகிறேன்.2014 ஆம் ஆண்டு தொடரில் கூட நான் இங்கு சதம் அடித்தேன். மெல்போர்ன் டெஸ்ட் போட்டி எனக்கு நல்ல நினைவுகளை தருகிறது. எந்த சர்ச்சையும் இல்லை” என்று கூறினார்.
The post அணி எதிர்பார்ப்பதை நிச்சயம் நிறைவேற்றுவேன்: விராட் கோஹ்லி appeared first on Dinakaran.