புதுச்சேரி மது கடத்திய டிராக்டர் டிரைவர் கைது

பள்ளிபாளையம், டிச.8: பள்ளிபாளையம் வஊசி நகரை சேர்ந்தவர் லோகநாதன்(52). டிராக்டர் டிரைவர். நேற்று மதியம் இவர் தனது டூவீலரில், ஒரு பையுடன் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த போலீசார் சந்தேகத்தின் பேரில் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். போலீசாரை கண்டதும் லோகநாதன் பதட்டத்தோடு முன்னுக்கு பின் முரணாக உளறினார். இதையடுத்து அவரது டூவீலரை போலீசார் சோதனை செய்தபோது 5 பாட்டில் பிராந்தி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பாட்டில்கள் அனைத்தும் பாண்டிச்சேரியிலிருந்து கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் அவரிடம் விசாரித்தபோது, தனக்கு தெரிந்த டிரைவர் மலிவான விலைக்கு கொடுத்ததாக தெரிவித்தார். இதையடுத்து பாட்டில்களையும், அதை கடத்த பயன்படுத்திய டூவீலரையும் போலீசார் பறிமுதல் செய்து, லோகநாதனை கைது செய்தனர். அவர் கொடுத்த தகவலின் பேரில், பாண்டிச்சேரியிலிருந்து பிராந்தி பாட்டில்களை கடத்தி வந்தவர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

The post புதுச்சேரி மது கடத்திய டிராக்டர் டிரைவர் கைது appeared first on Dinakaran.

Related Stories: