திருச்செங்கோடு, டிச.7: திருச்செங்கோடு ஒன்றியம், மொளசி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டம் மற்றும் பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம் குறித்து, சமூக தணிக்கை சிறப்பு கிராம சபை கூட்டம் நேற்று மொளசி பச்சையம்மன் கோயில் அருகில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் மீனாட்சி ராஜமாணிக்கம் தலைமை வகித்தார். சமூக தணிக்கை சிறப்பு கிராம சபை கூட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதிச்சட்டம் 2023-24ம் நிதியாண்டின் சமூக தணிக்கை மற்றும் பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின் கீழ் 2016-17 முதல் 2021-22 நிதியாண்டில் கட்டி முடிக்கப்பட்ட வீடுகளை கள ஆய்வு மற்றும் அளவீடுகள் 2.12.2024 முதல் 5.12.2024 வரை நடைபெற்றது. மேலும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் வேலைகள் ஏற்கப்பட்டு நிறை குறைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. வட்டார பயிற்றுநர்கள் சமூக தணிக்கை சிவசுப்பிரமணியம், அருணாசலம், மக்கள் நல பணியாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
The post மொளசியில் கிராம சபைக்கூட்டம் appeared first on Dinakaran.