கலெக்டர் ஆபிசுக்கு புகார் மனுக்களை கழுத்தில் மாலையாக அணிந்து வந்த நபர்

நாமக்கல், டிச.10: மோகனூர் தாலுகா என்.புதுப்பட்டி ஊராட்சி மேலப்பட்டியை சேர்ந்தவர் பழனிவேல். சமூக ஆர்வலர். இவர் நேற்று நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலம் வந்தார். மக்கள் குறைதீர்கூட்டத்தில் அவர் அளித்த கோரிக்கை மனுக்கள், அதற்கு அரசு அதிகாரிகள் அளித்த பதில்களை மாலையாக அணிந்து வந்திருந்தார். இதையடுத்து அவரை போலீசார் அழைத்து விசாரித்தனர். அப்போது அவர் கூறுகையில், மேலப்பட்டி கிராமத்தில் உள்ள நடைபாதை ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி தொடாந்து மனு அளித்து வருகிறேன். ஆனாலும் நடவடிக்கை இல்லை. இதனால் இதுவரை அளித்த புகார் மனுக்களை மாலையாக அணிந்து வந்துள்ளேன் என்றார்.

The post கலெக்டர் ஆபிசுக்கு புகார் மனுக்களை கழுத்தில் மாலையாக அணிந்து வந்த நபர் appeared first on Dinakaran.

Related Stories: