பரமத்திவேலூர், டிச.6: பரமத்திவேலூரை அடுத்த பொத்தனூர், வெங்கமேட்டில் உள்ள மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில், நேற்று கொப்பரை ஏலம் நடந்தது. இதில் விவசாயிகள் 5ஆயிரத்து 560 கிலோ கொப்பரையை கொண்டு வந்தனர். இதில் அதிகபட்சமாக ஒரு கிலோ ₹138.09க்கும், குறைந்த பட்சமாக ₹122.99க்கும், சராசரியாக ₹130.99க்கும் ஏலம் போனது. 2ம் தரம் அதிக பட்சமாக ₹120.99க்கும், குறைந்த பட்சமாக ₹98.51க்கும், சராசரியாக ₹108.99க்கும் ஏலம் போனது. இதில் மொத்தம் ₹6லட்சத்து 89ஆயிரத்து 860க்கு கொப்பரை ஏலம் போனது. கடந்த வாரத்தை விட நடப்பு வாரம் கொப்பரை விலை சரிந்ததால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
The post பரமத்திவேலூரில் ₹6.89 லட்சத்திற்கு கொப்பரை ஏலம் appeared first on Dinakaran.