அட்டகாசம் செய்த குரங்குகள் பிடிபட்டது

சேந்தமங்கலம், டிச.12: சேந்தமங்கலம் ஒன்றியம், வாழவந்தி கோம்பை ஊராட்சியில், வெண்டாங்கி கிராமம் உள்ளது. இங்குள்ள விநாயகர் கோயில் அருகே செல்போன் டவர் உள்ளது. இதில் 15க்கும் மேற்பட்ட குரங்குகள் வந்து அமர்ந்து, அப்பகுதியில் உள்ள வீடுகளில் உள்ளே சென்று உணவு பண்டங்கள், மளிகை பொருட்களை தூக்கி சென்று வந்தது. மேலும், தோப்புகளில் உள்ள தேங்காய், மாங்காய் உள்ளிட்டவைகளை பறித்து சேதப்படுத்தி வந்தது. இது குறித்த பொதுமக்கள் வனத்துறையினரிடம் புகார் தெரிவித்தனர். இதன் பேரில், நாமக்கல் வனத்துறை ரேஞ்சர் பழனிச்சாமி தலைமையில், வனத்துறை ஊழியர்கள் கூண்டு வைத்து 15 குரங்குகளை பிடித்து, கொல்லிமலை காப்பு காட்டில் விட்டனர்.

The post அட்டகாசம் செய்த குரங்குகள் பிடிபட்டது appeared first on Dinakaran.

Related Stories: