குரங்குகள் தொல்லையால் அவதி

திருச்செங்கோடு, டிச.11: திருச்செங்கோடு பகுதிகளில், குரங்குகள் தொல்லையால் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். திருச்செங்கோடு சங்ககிரி சாலையில் உள்ள கொள்ளுமேடு, கணபதி நகர் ஆகிய பகுதிகளில், குரங்குகள் தொல்லை மீண்டும் தலை தூக்கி உள்ளது. வடக்குப்பகுதியில் உள்ள மோரூர் கரட்டில் வாழும் இக்குரங்குகள் அங்கு உணவு கிடைக்காத நேரத்தில் அருகில் உள்ள குடியிருப்புகளில் புகுந்து விடுகின்றன. பாத்திரத்துடன் உணவுகளை எடுத்துக் கொண்டு ஓடிவிடுகிறது. பழங்கள் காய்கறிகளையும் விட்டு வைப்பதில்லை. மேலும் காய வைத்திருக்கும் துணிகளை எடுத்து சுற்றிக் கொள்கின்றன. கேபிள் ஒயர்களை பிடித்து நாசப்படுத்துகிறது. சில சமயங்களில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திலும் புகுந்து பொதுமக்களை பயமுறுத்தி வருகிறது. திருச்செங்கோடு நகராட்சி கேட்டுக்கொண்டதன் பேரில் வனத்துறையினர் கூண்டு வைத்து குரங்குகளைப் பிடி்த்து கொல்லிமலையில் விட்டனர். தற்போது குரங்கு தொல்லை மீண்டும் தலை தூக்கியுள்ளதால் வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post குரங்குகள் தொல்லையால் அவதி appeared first on Dinakaran.

Related Stories: