நாமக்கல், டிச.9: அம்பேத்கர் நினைவு தினத்தையொட்டி, நாமக்கல் மாநகராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம், 2 இடங்களில் நேற்று நடத்தப்பட்டது. மாநகராட்சி ஆணையாளர் மகேஸ்வரி உத்தரவுப்படி, கோட்டை நகர்புற நல மையம் மற்றும் தங்கம் மருத்துவமனையில் தூய்மை பணியாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் பரிசோதனைகள் நடைபெற்றன.
இதில் கண் பரிசோதனை, சிறுநீரக பரிசோதனை, சளி பரிசோதனை, ரத்த பரிசோதனைகள் செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. 219 தூய்மை பணியாளர்கள் பரிசோதனை செய்யப்பட்டு, 3 பணியாளர்கள் மேல் சிகிச்சைக்காக பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர். மருத்துவ முகாமில் மாநகர் நல அலுவலர் கஸ்தூரிபாய், துப்புரவு அலுவலர் திருமூர்த்தி, துப்புரவு ஆய்வாளர்கள் செல்வகுமார், பாஸ்கரன், ஜான்ராஜா, மற்றும் துப்புரவு பணி மேற்பார்வையாளர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
The post தூய்மை பணியாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் appeared first on Dinakaran.