அப்போது தந்தை தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தெரிவித்தார். இதையடுத்து, போக்சோ சட்டத்தின் கீழ், வெங்கடேசனை நேற்று கைது செய்து, சிறையில் அடைத்தனர். சென்னை திருமங்கலம் பகுதியை சேர்ந்த 9 வயது சிறுவனுக்கு அந்த பகுதியை சேர்ந்த 16 சிறுவன் ஒருவன் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளான். இதுபற்றி அறிந்த 9 வயது சிறுவனின் தாய், திருமங்கலம் போலீசில் நேற்று முன்தினம் புகார் கொடுத்தார்.
அதன்பேரில், திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி வழக்குபதிவு செய்து, 9 வயது சிறுவனிடம் விசாரணை நடத்தினர். அப்போது, 16 வயது சிறுவன் பாலியல் தொந்தரவு கொடுத்தது உறுதியானது. இதையடுத்து 16 வயது சிறுவனை போக்சோவில் கைது செய்தனர். இதன்பிறகு அந்த சிறுவனை சீர்திருத்தப்பள்ளியில் சேர்த்தனர்.
The post மகளுக்கு பாலியல் தொல்லை போக்சோவில் தந்தை கைது appeared first on Dinakaran.