ஊட்டியில் பிளாட் கட்டி தருவதாக ஆசை வார்த்தை கூறி ரூ.1 கோடிக்கு மேல் மோசடி: தலைமறைவாக இருந்த சங்கரலிங்கம் என்பவர் கைது

திண்டுக்கல்: ஊட்டியில் பிளாட் கட்டி தருவதாக ஆசை வார்த்தை கூறி ரூ.1 கோடிக்கு மேல் மோசடி செய்துவிட்டு தலைமறைவாக இருந்த சங்கரலிங்கம் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை தி.நகரில் இயங்கிவரும் M/S.Nathan Foundation நிறுவனத்தின் இயக்குநர் கே.வி.சங்கரலிங்கம் என்பவர் உதகமண்டலத்தில் பிளாட்டுகளை கட்டி விற்பனை செய்து வருவதாகவும், அவர்களே அங்கு 8 மாதத்திற்குள் பிளாட்டுகளை கட்டிடம் கட்டி கொடுக்கப்படும் என்றும் அப்படி கட்டி தராத பட்சத்தில் அதற்கு வாடகை அல்லது இழப்பீட்டு தொகை தருவதாகவும் பத்திரிக்கையில் கொடுத்த விளம்பரம் கொடுத்துள்ளார்.

இதனை நம்பி சென்னையை சேர்ந்த இக்னேஸிஸ் தாமஸ் சுரேஷ் எனபவர் அவரது மனைவி, மைத்துனர் மற்றும் இரண்டு நண்பர்கள் பெயரில் 6 பிளாட்டுகள் வாங்க வேண்டி அதற்குண்டான பணம் ரூ.1,45,42,815/-த்தை கொடுத்துள்ளார். ஆனால் நாதன் நிறுவனத்தின் ஒப்பந்தந்தத்தின்படி 8 மாதத்திற்குள் பிளாட்டுகளை கட்டி கொடுக்காமலும் அதற்குண்டான மாத வாடகை தொகையினை கொடுக்காமலும் ஏமாற்றியுள்ளார். இதனை அடுத்து M/S. Nathan Foundation நிறுவனத்தின் இயக்குநர் கே.வி.சங்கரலிங்கம் ஆ/வ.61), த/பெ.விஸ்வநாதன் ப.எண்.49, பு.எண்.86, பசுல்லா சாலை, தி.நகர். சென்னை- 17 என்பவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி சென்னை பெருநகர காவல் ஆணையாளரிடம் இக்னேஸிஸ் தாமஸ் சுரேஷ் புகார் கொடுத்துள்ளார்.

இந்த புகார் தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு, நம்பிக்கை ஆவண மோசடி பிரிவில் (EDF-2) வழக்குபதிவு செய்து புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது.

இதனை அடுத்து சென்னை பெருநகர காவல் ஆணையாளரின் உத்தரவின் பேரில், மத்திய குற்றபிரிவு நம்பிக்கை ஆவண மோசடி பிரிவு (EDF-2) காவல் ஆய்வாளர் அவர்களால் எதிரி சங்கரலிங்கம், ஆ/வ.60, த/பெ.விஸ்வநாதன் ப.எண்.49, பு.எண்.86. பசுல்லா சாலை, தி.நகர். சென்னை-17 என்பவரை கைது செய்யப்பட்டு, 15.11.2024-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.

மேலும் இவரால் பாதிக்கப்பட்டவர்கள் மத்திய குற்றபிரிவில் புகார் அளிக்க காவல்துறை சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் பத்திரிக்கையில் வரும் விளம்பரங்களில் உண்மை தன்மை அறிந்து பணத்தை நிறுவனங்களில் முதலிடு செய்யுமாறு காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

The post ஊட்டியில் பிளாட் கட்டி தருவதாக ஆசை வார்த்தை கூறி ரூ.1 கோடிக்கு மேல் மோசடி: தலைமறைவாக இருந்த சங்கரலிங்கம் என்பவர் கைது appeared first on Dinakaran.

Related Stories: