தன்னிடம் மாதவரம், கொரட்டூர் மற்றும் பொன்னேரி ஆகிய பகுதிகளில் நிலம் இருப்பதாகக் கூறினார். இதனை வாங்க நான் சம்மதம் தெரிவித்தேன். அப்போது, கிரையம் செய்து தருவதாக, என்னிடம் இருந்து ரூ.65.50 லட்சம் வரை வங்கி மூலமாகவும், ரொக்கமாகவும் பெற்றார். ஆனால், அதன்படி நிலத்தை கிரையம் செய்து தரவில்லை. சந்தேகத்தின் பேரில் நிலத்தின் ஆவணங்களை சரிபார்த்தபோது, வேறு ஒருவருக்கு சொந்தமான நிலத்தை, தனது நிலம் என்று கூறி போலியாக ஆவணம் தயார் செய்து இளங்குமரன் ஏமாற்றியது தெரிந்தது.
இதுபற்றி அவரிடம் கேட்டபோது முறையாக பதிலளிக்கவில்லை. பணத்தையும் தராமல் ஏமாற்றி வருகிறார். அவர் மீது நடவடிக்கை எடுத்து எனது பணத்தை மீட்டுத்தர வேண்டும் என்று கூறியிருந்தார். இதனையடுத்து ஆவடி காவல் ஆணையாளர் கி.சங்கர் மற்றும் காவல் துணை ஆணையாளர் பி.பெருமாள் ஆகியோரின் உத்தரவின் பேரில், உதவி ஆணையர் பொன்.சங்கர், ஆய்வாளர் கோபிநாத் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு கொடுங்கையூர் திருவள்ளுவர் நகர் பகுதியைச் சேர்ந்த இளங்குமரன் (49) என்பவரை நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர். அவரை பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
The post போலி ஆவணம் தயாரித்து அடுத்தவர் நிலத்தை விற்று ரூ.65.50 லட்சம் மோசடி: ஒருவர் கைது appeared first on Dinakaran.