அப்பொழுது திடீரென மாஞ்சா நூல் ஒன்று, பைக் முன்னால் அமர்ந்து இருந்த குழந்தை புகழ்வேலனின் கழுத்தில் சிக்கியது. சுதாரித்துக் கொண்ட பாலமுருகன் இருசக்கர வாகனத்தை நிறுத்துவதற்குள் குழந்தையின் கழுத்தில் மாஞ்சா நூல் அறுத்து ரத்தம் கொட்டியது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் உடனடியாக வியாசர்பாடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் குழந்தையை கொண்டு சேர்த்தார். அங்கு கழுத்தில் 7 தையல்கள் போடப்பட்ட நிலையில் புகழ்வேலன் சிகிச்சை பெற்று வருகிறான்.
இந்நிலையில், ராயபுரம் பகுதியை சேர்ந்த ஜிலானி பாஷா (48) என்பவர் நேற்று முன்தினம் மாலை 6 மணி அளவில் தனது மாமியார் வீட்டிற்கு சென்று விட்டு மீண்டும் வியாசர்பாடி ராமலிங்க அடிகளார் கோயில் வழியாக இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது மாஞ்சா நூல் கழுத்து மற்றும் கையில் விழுந்து அறத்ததில் காயம் ஏற்பட்டது. பிறகு அக்கம் பக்கத்தினர் உதவியுடன் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இரு வேறு சம்பவங்கள் குறித்து வியாசர்பாடி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன்பேரில், வியாசர்பாடி இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) அம்பேத்கர் தலைமையிலான போலீசார் வியாசர்பாடி முழுவதும் தீவிர சோதனை செய்து அப்பகுதியில் காற்றாடி விட்ட வியாசர்பாடி சி கல்யாணபுரம் பகுதியை சேர்ந்த ஹரி (19), கரண் (18), குமார் (30), நெல்சன் (42), வியாசர்பாடி சர்மா நகரை சேர்ந்த யுவராஜ் (23), பிரபு (40), தினேஷ் (28) மற்றும் 16 வயது சிறுவர்கள் இரண்டு பேர், 17 வயது சிறுவன் ஒருவன் உள்பட 10 பேரை கைது செய்தனர். இவர்களிடமிருந்து மாஞ்சா நூல் மற்றும் காற்றாடிகள், மாஞ்சா நூல் தயாரிக்க பயன்படுத்தப்படும் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட 10 பேரில் 7 பேர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். சிறார்கள் 3 பேரையும் சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து வியாசர்பாடி, எம்கேபி நகர், கொடுங்கையூர் உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் மாஞ்சா நூல் பயன்படுத்தி யாராவது காற்றாடி விட்டால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்து அப்பகுதியில் தீவிர ரோந்து பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
The post மாஞ்சா நூல் அறுத்து குழந்தை உள்பட இருவர் படுகாயம் வியாசர்பாடி முழுவதும் அதிரடி சோதனை: சிறுவர்கள் உள்பட 10 பேர் கைது appeared first on Dinakaran.