அதன் பின்பு அவர் பல்வேறு தவணைகளாக ரூ.1.45 கோடியே முதலீடு செய்ததாக தெரிகிறது. பணத்தைப் பெற்ற பிறகு கட்டுமான பணிகள் எதையும் துவங்காமல் சங்கரலிங்கம் இருந்து வந்தார். இதனால் இக்னேசியஸ் தாமஸ் சுரேஷ் தான் செலுத்திய பணத்தை திருப்பி தருமாறு கேட்டுள்ளார். ஆனால் அவர் பணத்தை தராமல் காலம் கடத்தி ஏமாற்றி வந்தார். இதனை தொடர்ந்து இக்னேசியஸ் தாமஸ் சுரேஷ் சென்னை மாநகர குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
இதனையறிந்த சங்கரலிங்கம் தலைமறைவானார். போலீசார் அவரை தேடி வந்தனர். விசாரணையில், அவர் கோவையில் பதுங்கியிருந்தது போலீசாருக்கு தெரிந்தது. இதனையடுத்து கோவை வந்த சென்னை போலீசார் வெள்ளக்கிணறில் பதுங்கி இருந்த கட்டுமான நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சங்கரலிங்கத்தை நேற்று முன்தினம் கைது செய்தனர். தொடர்ந்து அவரை சென்னைக்கு அழைத்துச் சென்று கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் சங்கரலிங்கம் இதுபோல் வேறு யாரிடமாவது மோசடி செய்துள்ளாரா என்பது குறித்தும் விசாரித்து வருகின்றனர்.
The post கட்டுமான நிறுவனம் நடத்தி ரூ.1.45 கோடி நூதன மோசடி: நிர்வாக இயக்குனர் கைது appeared first on Dinakaran.