பாலியல் வன்கொடுமை: சென்னையில் இளம்பெண் அளித்த புகாரில் பாடகர் குருகுகன் கைது!!

சென்னை: இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி மோசடி செய்த புகாரில் பாடகர் குருகுகனை கைது செய்தனர். குருகுகன் சரிகமப உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பாடியவர். சென்னை பரங்கிமலையை சேர்ந்த சாப்ட்வேர் என்ஜினீயர் பெண். கடந்த மே மாதம் ஹேப்பி ஸ்ட்ரீட் எனும் நிகழ்ச்சியில் அந்த பெண் கலந்து கொண்டார். அப்போது அங்கு நிகழ்ச்சி நடத்த வந்த குருகுகன் அந்த பெண்ணின் செல்போன் எண்ணை வாங்கிக் கொண்டு நட்பாக பேசி வந்துள்ளனர்.

இதையடுத்து குருகுகனும் அந்த பெண்ணும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இருவரும் தனிமையில் சந்தித்தாகவும், இதன் விளைவு அந்த பெண் கருவுற்றதாகவும் தெரியவந்தது. இதுகுறித்து குருகுகனிடம் சொன்ன போது அவர் கருவை கலைத்தால் திருமணம் செய்து கொள்வேன் என தெரிவித்தாராம். கருவைக் கலைத்துவிட்டு தன்னை திருமணம் செய்து கொள்ள அந்த பெண் கேட்ட போது குருகுகன் மறுத்துவிட்டாராம். இதனால் தாம் ஏமாற்றப்பட்டோம் என்பதை உணர்ந்த அந்த பெண் பரங்கிமலை போலீஸில் புகார் அளித்துள்ளார்.

அதில் தன்னை காதலித்து திருமணம் செய்வதாக கூறி கர்ப்பமாக்கியதாகவும், பின்னர் சாதியை சொல்லி திருமணம் செய்ய மறுத்துவிட்டு வெளிநாடு தப்பி செல்ல முயற்சிப்பதாகவும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி மோசடி செய்த புகாரில் பாடகர் குருகுகனை போலீசார் இன்று கைது செய்தனர். இளம்பெண் கூறிய குற்றச்சாட்டு தொடர்பாக, பொய்யான உத்தரவாதம், மிரட்டி ஆதாரங்களை அழிப்பது உள்ளிட்ட பிரிவுகளில் குருகுகன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

The post பாலியல் வன்கொடுமை: சென்னையில் இளம்பெண் அளித்த புகாரில் பாடகர் குருகுகன் கைது!! appeared first on Dinakaran.

Related Stories: