×

தேவதானப்பட்டி அருகே கிணற்றில் தவறி விழுந்த பசு மாடு உயிருடன் மீட்பு

தேவதானப்பட்டி, நவ. 12: தேவதானப்பட்டி அருகே சில்வார்பட்டி வஉசி தெருவைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன்(60). இவரது பசு மாடு சில்வார்பட்டி பெரிய ஓடை பகுதியில் உள்ள சரவணன் என்பவரது விவசாய தோட்டத்தில் மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக அருகில் இருந்த கிணற்றில் தவறி விழுந்தது.

கிணற்றில் தண்ணீர் இருந்ததால் லேசான காயங்களுடன் நீந்திக்கொண்டிருந்தது. உடனடியாக பெரியகுளம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. சிறப்பு நிலைய அலுவலர் முத்துசெல்லபாண்டி தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். கிணற்றில் தவறி விழுந்த பசு மாட்டை கயிற்றை கட்டி ஜேசிபி வண்டியின் உதவியுடன் பத்திரமாக மீட்டனர்.

The post தேவதானப்பட்டி அருகே கிணற்றில் தவறி விழுந்த பசு மாடு உயிருடன் மீட்பு appeared first on Dinakaran.

Tags : Devadanapati ,Balasubramanian ,Silvarpatty Vausi Street ,Devdanapatti ,Saravanan ,Silvarpatty Great Stream ,Dinakaran ,
× RELATED தேவதானப்பட்டி அருகே கஞ்சா பறிமுதல்...