×

பண்ருட்டி அருகே கார் டயர் வெடித்து விபத்து: 10 மூட்டை புகையிலை பொருள் சிக்கியது

பண்ருட்டி, நவ. 13: பண்ருட்டி அருகே புதுப்பேட்டை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பண்ருட்டி -கெடிலம் சாலையில் நேற்று மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி கார் ஒன்று வந்து கொண்டிருந்தது. அந்தக் காரை ராஜஸ்தான் மாநிலம் ஜாலூரை சேர்ந்த துர்காராம் (26) என்பவர் ஓட்டி வந்தார். இந்த கார் திருவாமூர் அருகே வந்து கொண்டிருந்தபோது காரின் டயர் திடீரென வெடித்தது. இதில் கார் நிலை தடுமாறி ரோட்டின்அருகிலிருந்த தேக்க மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

இதுபற்றி தகவல் அறிந்த புதுப்பேட்டை இன்ஸ்பெக்டர் அசோகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் அடிபட்ட ஓட்டுநரை மீட்டு பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது காரில் தடை செய்யப்பட்ட 10 மூட்டை புகையிலை பொருட்கள்இருந்தது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் இதுதொடர்பாக காரில் வந்த ராஜஸ்தானை சேர்ந்த ஒருவரை பிடித்து காவல்நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அவரிடம் புகையிலைப் பொருட்கள் கடத்தல் குறித்து விசாரணை செய்து வருகின்றனர். தப்பி ஓடிய தீபக் என்பவரை தேடி வருகின்றனர்.

The post பண்ருட்டி அருகே கார் டயர் வெடித்து விபத்து: 10 மூட்டை புகையிலை பொருள் சிக்கியது appeared first on Dinakaran.

Tags : Panruti ,Panrutti ,Panruti-Kedilam road ,Pudupettai Police Station ,Durgaram ,Jalur, Rajasthan ,Panruthi ,Dinakaran ,
× RELATED பண்ருட்டி அருகே எல்.என்.புரத்தில் கிராம மக்கள் திடீர் மறியல்