×

பலகாரம் செய்தபோது கொதிக்கும் எண்ணெய்யில் விழுந்து ஸ்வீட் கடை உரிமையாளர் பலி

சிதம்பரம், நவ. 13: சிதம்பரம் சொக்கலிங்கம் நகர் 2வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் மாணிக்கம்(73). இவர் சிதம்பரம் சின்னக்கடை தெருவில் சிறிய ஸ்வீட் கடை வைத்து நடத்தி வந்தார். நேற்று மதியம் கடையில் பலகாரம் செய்து கொண்டிருந்தார்.

அப்போது மாணிக்கத்திற்கு திடீரென மயக்கம் ஏற்பட்டு எதிர்பாராத விதமாக கொதிக்கும் எண்ணெய் சட்டியில் விழுந்தார். இதில், முகம் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சிதம்பரம் நகர போலீசார் சென்று, அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரத்தில் உள்ள அரசு காமராஜர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post பலகாரம் செய்தபோது கொதிக்கும் எண்ணெய்யில் விழுந்து ஸ்வீட் கடை உரிமையாளர் பலி appeared first on Dinakaran.

Tags : Chidambaram ,Manickam ,2nd Cross Street Chidambaram Chokkalingam Nagar ,Chidambaram Chinnakadai Street ,Manika ,
× RELATED கனமழை எச்சரிக்கை காரணமாக சிதம்பரம்...