×

குடும்பநல நிதி ₹ 50 ஆயிரம் வழங்கக்கோரி அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

திருவாரூர், நவ.13: குடும்பநல நிதி ரூ.50 ஆயிரம் வழங்கக்கோரி சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். சத்துணவு அங்கன்வாடி பதவி உயர்வு பெற்ற ஆசிரியர் மற்றும் ஓய்வுபெற்ற அனைத்து ஓய்வூதியர்களுக்கும் முறையான ஓய்வூதியம் வழங்கவேண்டும், அகவிலைப்படி மற்றும் குடும்ப ஓய்வூதியம் வழங்கவேண்டும், குடும்ப நலநிதியாக ரூ.50 ஆயிரம் வழங்க வேண்டும். இலவச மருத்துவ காப்பீடு மற்றும் மருத்துவப்படி வழங்கவேண்டும், இறுதிச்சடங்கு தொகையாக ரூ.25 ஆயிரம் வழங்கிவேண்டும், பண்டிகைகால முன்பணம் மற்றும் பொங்கல் பரிசுத் தொகை உயர்த்தி வழங்கிட வேண்டும், காலை உணவு திட்டத்தை சத்துணவு அமைப்பாளரிடம் ஒப்படைத்து செயல்படுத்த வேண்டும், வரையறுக்கப்பட்ட குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ. 7 ஆயிரத்து 850- வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூரில் நேற்று கலெக்டர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு அனைத்து சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தினர் மாவட்ட அமைப்பாளர் புவனேஸ்வரி தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

The post குடும்பநல நிதி ₹ 50 ஆயிரம் வழங்கக்கோரி அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Anganwadi ,Thiruvarur ,Sathunavu ,Anganwadi Pensioners' Associations ,Sathunavu Anganwadi ,
× RELATED ஆர்.கே.பேட்டை சமத்துவபுரத்தில் புதர்மண்டிய அங்கன்வாடி மையம் சீரமைப்பு