×

பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் போட்டி தேர்வில் தேர்ச்சி பெற்ற பட்டய கணக்காளர்களுக்கு தாட்கோவில் பயிற்சி

திருச்சி, நவ.13: தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் சார்ந்தவா்களுக்கு பட்டயகணக்காளா், இடைநிலை நிறுவன செயலாளா், இடைநிலை செலவு மற்றும் மேலாண்மை கணக்காளா், இடைநிலை ஆகிய போட்டி தேர்வில் தேர்ச்சி பெற தாட்கோவில் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சார்பில் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின மாணாக்கா்களுக்கு தாட்கோவின் முன்னெடுப்பாக சென்னையில் உள்ள முன்னணி பயிற்சி நிறுவனத்துடன் இணைந்து 100 ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின மாணாக்கா்களுக்கு இடைநிலை நிறுவன செயலாளா் – இடைநிலை செலவு மற்றும் மேலாண்மை கணக்காளா், இடைநிலை ஆகிய போட்டி தேர்வில் தேர்ச்சிபெற தாட்கோவில் பயிற்சி அளிக்கப்படவுள்ளது. இதற்கான தகுதிகள் ஆதிதிராவிட மற்றும் பழங்குடியினர் இனத்தை சார்ந்தவராக இருக்க வேண்டும்.

இப்பயிற்சி பெறவிரும்பும் மாணக்கர்கள் இளநிலை வணிகவியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும் அவர்களின் குடும்ப ஆண்டு வருமானம் ₹.3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். ஒரு வருட பயிற்சிக்கு தோ்வு செய்யப்படும் மாணாக்கர்களுக்கு தங்கும் வசதி மற்றும் உணவு வசதிகள் தாட்கோ மூலம் ஏற்பாடு செய்யப்படும். தகுதியுள்ள மாணாக்கர்கள் இப்பயிற்சியில் சேருவதற்கு தாட்கோ இணையதளத்தில் பதிவு செய்து பயன்பெறலாம். மேலும், விபரங்களுக்கு மாவட்ட மேலாளா் அலுவலகம், தாட்கோ, ராஜாகாலனி, கலெக்டர் அலுவலகச் சாலை, திருச்சி. 0431-2463969 என்ற முகவாியில் தொடா்பு கொண்டு இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளலாம் என மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.

The post பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் போட்டி தேர்வில் தேர்ச்சி பெற்ற பட்டய கணக்காளர்களுக்கு தாட்கோவில் பயிற்சி appeared first on Dinakaran.

Tags : Trichy ,Tamil Nadu ,Aditya Dravidian Housing and Development Corporation ,TADCO ,Adi Dravidar ,Tatco ,Dinakaran ,
× RELATED உளுந்தூர்பேட்டையில் கத்தி, அருவா,...