×
Saravana Stores

தஞ்சை மாவட்ட மாற்று திறனாளிகளுக்கு கலெக்டர் அழைப்பு: செயற்கை கை, கால்களுக்கு இன்று சிறப்பு அளவீடு

தஞ்சாவூர், நவ. 13: தஞ்சாவூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை கிடைக்கப் பெறாத மாற்றுத்திறனாளிகள் பயன்பெற வட்டார வாரியாக சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெற உள்ளது என கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார். தஞ்சாவூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை மற்றும் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை (UDID) வழங்கப்பட்டு வருகிறது. தற்பொழுது தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் மகளிர் திட்ட பணியாளர்களை கொண்டு சமூக தரவு கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் A பிரிவில் 8,644 மாற்றுத்திறனாளிகளும், B பிரிவில் 12,138 பயனாளிகளும், C பிரிவில் 2,741 மாற்றுத்திறனாளிகளும் உள்ளனர்.

முகாம்கள் நடக்கும் விவரம்: அதன்படி, C வகை மாற்றுத்திறனாளிகள் 2,741 நபர்களுக்கு மருத்துவ முகாம் நடத்த தேசிய அடையாள அட்டை மற்றும் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை (UDID) வழங்கிட சிறப்பு முகாம்கள் வட்டார வாரியாக திருவையாறு வட்டாரத்தில் இன்று சரஸ்வதி அம்மாள் தொடக்கப்பள்ளி திருவையாறிலும், பட்டுக்கோட்டை வட்டாரத்தில் நாளை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்திலும், கும்பகோணம் வட்டாரத்தில் 19ம் தேதி KMSS – கும்பகோணத்திலும், பாபநாசம் வட்டாரத்தில் 21ம் தேதி அபிதீன் மெட்ரிகுலேசன் பள்ளி பாபநாசத்திலும், தஞ்சாவூரில் 22ம் தேதி அன்று மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும், அதிராம்பட்டினம் வட்டாரத்தில் 23ம் தேதி காதர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைபள்ளி, அதிராம்பட்டினத்திலும் பட்டுக்கோட்டை வட்டாரத்தில் 26ம் தேதி வட்டார சேவை மையம், பட்டுக்கோட்டையிலும், திருப்பனந்தாள் வட்டத்தில் 27ம் தேதி வட்டார சேவை மையம், திருப்பனந்தாளிலும், பூதலூர் வட்டாரத்தில் 28ம் தேதி அரசு ஆண்கள் மேல்நிலைபள்ளி, பூதலூரிலும், திருவிடைமருதூர் வட்டாரத்தில் 29ம் தேதி வட்டார சேவை மையம், திருவிடைமருதூரிலும் நடக்கிறது.

தேவையான ஆவணங்கள்: இதுவரை தேசிய அடையாள அட்டை மற்றும் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை (UDID) பெறாத மாற்றுத்திறனாளிகளாக கணக்கெடுப்பாளர்களால் கண்டறியப்பட்டவர்களும் மற்றும் கண்டறியப்படாதவர்களும் கலந்து கொண்டு மரு த்துவ சான்று பெற்று தேசிய அடையாள அட்டை மற்றும் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை (UDID) பெற மாற்றுத்திறனாளிகள் அவர்களுக்குரிய குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல் மற்றும் 6 புகை ப்படத்துடன் இதற்கு முன் சிகிச்சை பெற்ற ஆவணங்களுடன் மேற்காணும் விபரப்படி நடைபெறும் முகாம்களில் கலந்து கொண்டு வந்து கலந்து கொண்டு பயன்பெறலாம்.

அளவீடு முகாம்: அதேபோல், தமிழக அரசு, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் வழங்கப்படும் மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை பெற்றவர்களுக்கு, பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. அதன்படி விபத்து மற்றும் வேறு காரணங்களால் கை, கால் துண்டிக்கப்பட்டவர்களுக்கு செயற்கை அவயங்கள் வழங்குவதற்கான சிறப்பு அளவீடு முகாம் இன்று 13ம் தேதி (புதன் கிழமை) மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடைபெற உள்ளது. எனவே, கை, கால் செயற்கை அவயங்கள் தேவைபடுவோர் கீழ்கண்ட ஆவணங்களுடன் வந்து நேரில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

மாற்றுத்திறனாளிக்கான தேசிய அடையாள அட்டை அசல், நகல், ஆதார் அட்டை அசல் மற்றும் நகல் முதலமைச்சரின் விரிவான மருத்துவகாப்பீட்டு அட்டை அசல் மற்றும் நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படம்-4 ஆகியவற்றை கொண்டு வர வேண்டும் என கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.

The post தஞ்சை மாவட்ட மாற்று திறனாளிகளுக்கு கலெக்டர் அழைப்பு: செயற்கை கை, கால்களுக்கு இன்று சிறப்பு அளவீடு appeared first on Dinakaran.

Tags : Tanji District ,Thanjavur ,THANJAVUR DISTRICT ,PRIYANKA PANKAJAM ,Thanjavur District National ,Tanjai District ,Dinakaran ,
× RELATED தஞ்சாவூர் மாவட்டம் சாலியமங்கலம்...