×

செல்போன் திருடியவர் கைது

திருச்சி, நவ.13: திருச்சி மேலப்பஞ்சப்பூர் காலனி தெருவை சேர்ந்தவர் மகேந்திரன். இவரது மனைவி ரேகா(33). இவர் நேற்று முன்தினம் திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் இருந்து சத்திரம் பஸ் நிலையத்திற்கு சென்றார். அப்போது கண்டோன்மெண்ட் பகுதியில் பஸ் சென்றபோது இவரது கைப்பையை ஒருவர் திருடினார். உடனே சுதாரித்த ரேகா மற்றும் பயணிகள் அவரை கையும் களவுமாக பிடித்து கண்டோன்மெண்ட் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் வழக்குப்பதிந்து விசாரனை நடத்தினர். விசாரணையில் தென்னூரை சேர்ந்த முகமது சலீம் (43) என்பது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் முகமது சலீமை கைது செய்து அவரிடம் இருந்து பணம், செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

The post செல்போன் திருடியவர் கைது appeared first on Dinakaran.

Tags : Trichy ,Mahendran ,Trichy Malappanjapur Colony Street ,Reka ,Mundinam Trichy Central Bus Station ,Satram Bus Station ,
× RELATED திருச்சியில் மண் சரிவில் சிக்கிய தொழிலாளி பத்திரமாக மீட்பு..!!