×

பெரியகுளம் பகுதியில் 2 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

பெரியகுளம், நவ. 12: பெரியகுளம் நகராட்சி ஆணையாளர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது, பெரியகுளம் நகராட்சி பகுதியில் தலைமை குடிநீர் நீரேற்று நிலையத்திலிருந்து வ.உ.சி. பூங்கா மேல்நிலைத் தொட்டி வளாகத்திற்கு குடிநீர் கொண்டு வருவதற்கு பதிக்கப்பட்டுள்ள பிரதான குடிநீர் குழாய் வழித்தடத்தில் குழாய் உடைப்புகள் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. எனவே 14.11.2024 மாலை மற்றும் 15.11.2024 அன்று காலை மற்றும் மாலை ஆகிய வேளைகளில் குடிநீர் விநியோகம் செய்ய இயலாது என்றும் பொதுமக்கள் நகராட்சிக்கு முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post பெரியகுளம் பகுதியில் 2 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம் appeared first on Dinakaran.

Tags : Periyakulam ,Commissioner ,Periyakulam Municipality ,V.U.C. ,
× RELATED பருவமழை தொடரும் காலத்தில் பயிர்களுக்கான முன்னேற்பாடுகள்