×

கூடலூர் கோயிலில் ஆக்கிரமிப்பு அகற்றம்

 

கூடலூர், நவ.12: கூடலூர் ஈஸ்வரன் கோயிலில் தனியார் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. தேனி மாவட்டம் கூடலூரில், தாமரைக்குளம் ஈஸ்வரன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் ஒரு தரப்பினர் கிடா வெட்டுதல் மற்றும் பூஜை செய்வதற்கு மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கும் வகையில் உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியர் உத்தரவின்பேரில், மறுஉத்தரவு வரும் வரை ஈஸ்வரன் கோயிலில் கூட்டம் நடத்தவும், பூஜைகள் செய்யவும், புனரமைப்பு பணி மேற்கொள்ளவும் தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில், இக்கோயிலில் வளாகத்தில் தனியார் ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பாக ஆர்டிஓவிடம் மனு கொடுக்கப்பட்டது.  இதனடிப்படையில் நேற்று முன் தினம் கோயில் வளாகத்தில் தனியாரால் அமைக்கப்பட்டிருந்த முள்வேலி மற்றும் ஆக்கிரமிப்புகளை வருவாய்த்துறை அதிகாரிகள் அகற்றினர்.

The post கூடலூர் கோயிலில் ஆக்கிரமிப்பு அகற்றம் appeared first on Dinakaran.

Tags : Kudalur ,Iswaran Temple ,Tamaraikulam Eswaran Temple ,Kudalur, Theni district ,Kita ,Kudalur temple ,Dinakaran ,
× RELATED யானையை பார்த்து பயந்து மரத்தில் ஏறி...