×

மேல்நிலை பள்ளியாக தரம் உயர்த்த மக்கள் கோரிக்கை

 

தேவகோட்டை, நவ.12: கடந்த 1938ம் ஆண்டு தேவகோட்டை நகராட்சி அந்தஸ்து பெற்றது. அன்றில் இருந்து கடந்த 87 வருடங்கள் ஆகியும் இதுவரை அரசு மேல்நிலைப்பள்ளி கிடையாது. தேவகோட்டை மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான மாணவ,மாணவிகள் தேவகோட்டை நகருக்கு கல்வி கற்க வருகின்றனர். இரண்டு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிகளும், இரண்டு பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளும், அரசு உதவி பெறும் பள்ளிகளாக செயல்பட்டு வருகிறது.பள்ளியில் படிப்பதற்கு கட்டணம் அரசு கட்டணம் மட்டுமே பெற்றோர்கள் செலுத்த வேண்டும்.

இவை நீங்கலாக வருடத்திற்கு ரூ.15ஆயிரம் முதல் ரூ.25ஆயிரம் வரை டியூஷன் பீஸாக கட்டவேண்டும். ஏழை எளிய மக்கள் இதன் காரணமாக பணம் செலுத்த பெரும் கஷ்டத்தில் தவிக்கின்றனர்.இதுபற்றி சமூக ஆர்வலர் ராம்நகர் தினகரன், முதல்வருக்கு மனு அனுப்பியுள்ளார். தேவகோட்டையில் அரசு உயர்நிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தி ஏழை,எளிய மாணவர்களின் கல்வியை மேம்படுத்த வேண்டும் என கோரிக்கை மனு அனுப்பி உள்ளார்.சிவகங்கை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் இருந்து நடவடிக்கை எடுப்பதாகவும் மாவட்ட கல்வி அலுவலகம் விரைந்து நடவடிக்கை எடுக்க கருத்துரு அனுப்பி உள்ளது. நீண்ட கால மக்கள் கோரிக்கை நிறைவேற்றப்படும் என பொதுமக்கள் பெரிதும் எதிர்பார்க்கின்றனர்.

The post மேல்நிலை பள்ளியாக தரம் உயர்த்த மக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Devakottai ,Dinakaran ,
× RELATED தேவகோட்டை கண்ணங்குடியில் குழந்தைகள் தின விழா கொண்டாட்டம்