×

திமுக பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்

 

ராமநாதபுரம், நவ.12: கமுதி அருகே திமுக பாகமுகவர்கள் மற்றும் பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கமுதி திமுக மத்திய ஒன்றியம் சார்பில் புதுக்கோட்டையில் பாகமுகவர்கள் மற்றும் பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் முதுகுளத்தூர் சட்டப்பேரவை தொகுதி பொறுப்பாளர் வேல்முருகன் தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் கமுதி ஒன்றிய திமுக செயலாளர் சண்முகநாதன் வரவேற்று பேசினார். அவை தலைவர் கிழவராஜன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் வரும் 2026 சட்டப் பேரவைத் தேர்தலில் 200 தொகுதிகள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டு திமுக அதில் வெற்றி பெற வேண்டும். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள நான்கு தொகுதிகளிலும் திமுக வெற்றி அடைய களப்பணியாற்ற வேண்டும்.

பசும்பொன் தேவர் குருபூஜையில் பங்கேற்று சிறப்பு செய்த தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இந்த கூட்டத்தில் ஒன்றிய துணைச் செயலாளர்கள் நீதிராஜன், தங்கப்பாண்டியன், ஊ.கரிசல்குளம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பாண்டி, பொருளாளர் செந்தூர்பாண்டி, மாவட்ட பிரதிநிதி நாகமணி, முருகேசன், மணிகண்டன் உள்பட 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

The post திமுக பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் appeared first on Dinakaran.

Tags : DMK ,Ramanathapuram ,Booth Committee ,Kamudi ,Pudukottai, Mudugulathur ,Velmurugan ,Dinakaran ,
× RELATED மாவட்டம் முழுவதும் பனிபொழிவுடன் சாரல் மழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு