மாவட்டம் முழுவதும் விமரிசையாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை கொண்டாடவேண்டும்: அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் பேச்சு

திருவள்ளூர்: திருவள்ளூர் மத்திய மாவட்ட திமுக செயற்குழு, தொகுதி பார்வையாளர்கள் ஆலோசனை கூட்டம் பூந்தமல்லியில் மாவட்ட அவைத் தலைவர் ம.இராஜி தலைமையில் நடைபெற்றது. தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் ஆ.கிருஷ்ணசாமி எம்எல்ஏ, கே.ஜெ.ரமேஷ், மாநில, மாவட்ட நிர்வாகிகள் சி.ஜெரால்டு, வி.ஜெ.சீனிவாசன், எஸ்.ஜெயபாலன், காயத்திரி ஸ்ரீதரன், தொழுவூர் பா.நரேஷ்குமார், த.எத்திராஜ், ஜி.ராஜேந்திரன், ஜி.விமல்வர்ஷன், வி.குமார், ஜெ.மகாதேவன், காஞ்சனா சுதாகர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய செயலாளர் ப.ச.கமலேஷ், பேரூர் செயலாளர் தி.வே.முனுசாமி ஆகியோர் வரவேற்றனர். இந்த கூட்டத்தில் மாவட்ட செயலாளரும் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலன் துறை அமைச்சருமான ஆவடி சா.மு.நாசர் பேசியதாவது;

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கியும் இளைஞர்களுக்கு விளையாட்டு போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கியும் வெகு விமர்சையாக கொண்டாட வேண்டும். வருகின்ற 29.10.2024 முதல் 28.11.2024 வரை புதிய வாக்காளர்களை சேர்க்கவும் பெயர்கள் நீக்கவும், திருத்தம் செய்யவும் மனுசெய்ய கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. சனி, ஞாயிறுகளில் நிர்ணயிக்கப்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளது. வாக்காளர்கள் பட்டியலில் உள்ள தங்களது விவரங்களை சரிபார்த்து விடுபட்ட வாக்காளர்களும் இடம் மாறிய வாக்காளர்களும் 1.1.2025 அன்று 18 வயது நிரம்பக்கூடிய புதிய வாக்காளர்களும் தங்களது பெயர்களை சேர்க்க படிவங்களை பெற்று, பூர்த்தி செய்து வாக்குச்சாவடி மையங்களில் கொடுக்க வேண்டும்.இவ்வாறு பேசினார்.

இந்த கூட்டத்தில் முரசொலி நாளிதழின் ஆசிரியர் முரசொலி செல்வம் மறைவுக்கு இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர். இதில் தொகுதிகளின் பார்வையாளர்களான மாநில தொழிலாளர் அணி செயலாளர் செல்வராஜ், மாநில விளையாட்டு அணி துணைச் செயலாளர் நிவேதா ஜேசிகா, ஆவடி மேயர்ஜி.உதயகுமார், வழக்கறிஞர் என்.பி.மாரிமுத்து, மாநகர, ஒன்றிய, நகர, பகுதி செயலாளர்கள் சன்.பிரகாஷ், டி.தேசிங்கு, என்.இ.கே.மூர்த்தி, ஜி.ஆர்.திருமலை, ஆர்.ஜெயசீலன், சே.பிரேம் ஆனந்த், டி.ராமகிருஷ்ணன், தி.வை.இரவி, பேபிசேகர், பொன்.விஜயன் கலந்து கொண்டனர்.

The post மாவட்டம் முழுவதும் விமரிசையாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை கொண்டாடவேண்டும்: அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: