×

கிணற்றில் தவறி விழுந்த விவசாயி மீட்பு

கெங்கவல்லி, அக்.4: கெங்கவல்லி அருகே தெடாவூர் பேரூராட்சியில், வையாபுரி என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் 120 அடி ஆழ கிணறு உள்ளது. இதில் 30 அடி தண்ணீர் இருக்கும் நிலையில், அவ்வழியாக அதே பகுதியைச் சேர்ந்த சென்ற மாதவன் மகன் மணி(32) என்பவர் கிணற்றில் தவறி விழுந்தார். அவரது சத்தம் கேட்டு, வையாபுரியின் மருமகள் முத்துலட்சுமி கிணற்றில் பார்த்தபோது, மணி தத்தளிப்பது தெரியவந்தது. இதுகுறித்த தகவலின் பேரில், கெங்கவல்லி தீயணைப்பு நிலைய அலுவலர்(பொ) செல்லப்பாண்டியன் தலைமையில், வீரர்கள் விரைந்து வந்து, ஊர் மக்கள் உதவியுடன் கயிற்றின் மூலமாக 2மணி நேர போராட்டத்திற்கு பின், மணியை உயிருடன் மீட்டனர். பின்னர், அவரை தெடாவூர் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.

The post கிணற்றில் தவறி விழுந்த விவசாயி மீட்பு appeared first on Dinakaran.

Tags : Kengavalli ,Vayapuri ,Thedaur district ,Madhavan ,Mani ,Dinakaran ,
× RELATED தீக்குளிக்க முயன்ற வாலிபர் கைது