×
Saravana Stores

2 வயது ஆண் குழந்தை திடீர் சாவு

சேலம், அக்.4: சேலம் கன்னங்குறிச்சி சின்னதிருப்பதி நேரு நகரை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன். இவரது 2 வயது ஆண் குழந்தை லத்வேக், கடந்த 2 நாட்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தான். இதனால், மருத்துவமனையில் சிகிச்சை அளித்துவிட்டு, வீட்டிற்கு வந்துள்ளனர். வீட்டில் இருக்கும்போது நேற்று முன்தினம் அதிகாலை நேரத்தில் திடீரென மயங்கி விழுந்ததோடு, குழந்தை லத்வேக் வாந்தி எடுத்துள்ளான்.உடனே குழந்தையை தூக்கிக் கொண்டு சேலம் அரசு மருத்துவமனையில் கொண்டு வந்து சேர்த்தனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதித்து பார்த்துவிட்டு, வரும் வழியிலேயே குழந்தை இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுபற்றி தகவல் அறிந்த கன்னங்குறிச்சி போலீஸ் எஸ்ஐ மோனிகா தலைமையிலான போலீசார் சம்பவ இடம் சென்று விசாரித்தனர். தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து, குழந்தை இறப்பிற்கான காரணம் குறித்து விசாரித்து போலீசார் வருகின்றனர்.

The post 2 வயது ஆண் குழந்தை திடீர் சாவு appeared first on Dinakaran.

Tags : Salem ,Gopalakrishnan ,Salem Kannagurichi Sinnathirupathi Nehru ,Lathweg ,
× RELATED சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே தனியார் பேருந்து தீ பிடித்து எரிந்தது!