×

குரூப் 2ஏ முதன்மை தேர்வுக்கு பயிற்சி

சேலம், அக்.2: சேலம் மாவட்ட கலெக்டர் பிருந்தாதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி மூலம் குரூப் 2, 2ஏ முதல்நிலை தேர்வுகள் கடந்த 14ம் தேதி நடத்தப்பட்டது. இதன் அடுத்தகட்ட தேர்வான குரூப் 2ஏ முதன்மை தேர்விற்கான இலவசப் பயிற்சி வகுப்புகள், சேலம்-ஏற்காடு சாலை கோரிமேட்டில் செயல்பட்டு வரும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வரும் 9ம் தேதி காலை 10 மணிக்கு தொடங்குகிறது. தற்போது நடத்தப்படவுள்ள தொகுதி குரூப் 2ஏ முதன்மை தேர்விற்கான இலவசப் பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள தகுதியும், விருப்பமும் உள்ள தேர்வர்கள் முதல்நிலை தேர்வின் ஹால்டிக்கெட் மற்றும் இரண்டு பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரில் அணுகி முன்பதிவு செய்துகொள்ள வேண்டும்.இதுதொடர்பான ேமலும் விவரங்களுக்கு 0427-2401750 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post குரூப் 2ஏ முதன்மை தேர்வுக்கு பயிற்சி appeared first on Dinakaran.

Tags : Salem ,District ,Collector ,Brinda Devi ,TNPSC ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED எஸ்.பி., அலுவலகத்தில் ஐஜி வருடாந்திர...