×

சாலை பணி துவக்க விழா

சேலம், செப்.29: பனமரத்துப்பட்டி பேரூராட்சியில், தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், ₹36 லட்சம் மதிப்பீட்டில் திடக்கழிவு மேலாண்மை பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. மேலும், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ₹56.50 லட்சம் மதிப்பீட்டிலும், மாநில நிதி ஆணைய திட்டத்தின் கீழ் ₹140 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கும் பணி பூமி பூஜையுடன் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கிழக்கு மாவட்ட திமுக துணை செயலாளர் சுரேஷ்குமார், நகர திமுக செயலாளர் ரவிக்குமார், பேரூராட்சி தலைவர் பரமேஸ்வரி, துணை தலைவர் பிரபு கண்ணன், செயல் அலுவலர் நீலாதேவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

The post சாலை பணி துவக்க விழா appeared first on Dinakaran.

Tags : Salem ,Panamarathupatti ,State Finance Commission ,Road Works Inauguration Ceremony ,Dinakaran ,
× RELATED பெஞ்சல் புயலால் மழை கொட்டி தீர்த்தபோதும் வறண்டு கிடக்கும் 60 ஏரிகள்