×

மூதாட்டி வீட்டிற்கு தீ வைப்பு

சேலம், செப்.27: சேலம் கொண்டலாம்பட்டி பக்கமுள்ள நாட்டாமங்கலம் பகுதியை சேர்ந்தவர் அலமேலு(58). கூலித்தொழிலாளி. கணவர் இறந்த நிலையில் தனியாக வசித்து வருகிறார். நேற்று அதிகாலை 3.30 மணியளவில் திடீரென அவரது குடிசை வீடு தீப்பிடித்து எரிந்தது. வீட்டிலிருந்து வெளியே வந்த அலமேலு சத்தம்போட்டார். அங்கிருந்தவர்கள் ஓடிவந்து தீயை அணைத்தனர். இதுகுறித்து கொண்டலாம்பட்டி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது, இரவு நேரத்தில் குடிசை வீட்டின் மீது கல்வீசப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். இதையடுத்து தடயவியல்துறை துணை இயக்குனர் வடிவேல் மற்றும் அதிகாரிகள் விரைந்து சென்று ஆய்வு செய்து வருகின்றனர். மூதாட்டியை மிரட்டுவதற்காக யாராவது தீ வைத்தார்களா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post மூதாட்டி வீட்டிற்கு தீ வைப்பு appeared first on Dinakaran.

Tags : Salem ,Alamelu ,Nattamangalam ,Kondalampatti ,Dinakaran ,
× RELATED கிரேன் மோதி பெண் பலி