நெமிலி ஒன்றியத்தில் கோடை பயிர் சாகுபடி திட்டத்தில் புதிய சன்னரக நெல் பரவலாக நடவு

*உதவி இயக்குனர் நேரில் ஆய்வு

நெமிலி : நெமிலி ஒன்றியத்தில் கோடை பயிர் சாகுபடி திட்டத்தில் புதிய சன்ன ரக நெல் பரவலாக நடவு செய்துள்ளதை உதவி இயக்குனர் நேற்று நேரில் ஆய்வு செய்தார். ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி ஒன்றியத்தில் கோடை பயிர் சாகுபடி திட்டம் 2024-25 சன்ன ரக நெல் கோ-55 வேளாண்துறையின் மூலம் விவசாயிகளுக்கு அறிமுகப்படுத்தப்பட்டு பரவலாக நடவு செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நெமிலி ஒன்றியத்தில் நெல் நடவு செய்யப்பட்டதை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அருணாகுமாரி, உதவி வேளாண்மை அலுவலர் செந்தில் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர். இதுதொடர்பாக விவசாயிகள் கூறுகையில், ‘இதற்கு முன்பு கோ -51 ரக நெல் சாகுபடி செய்திருந்தோம். தற்போது புதிய ரகமான சன்னரக நெல்லுக்கு அதிக லாபம் கிடைப்பதால் இதனை நடவு செய்து வருகிறோம்’ என்றனர்.

The post நெமிலி ஒன்றியத்தில் கோடை பயிர் சாகுபடி திட்டத்தில் புதிய சன்னரக நெல் பரவலாக நடவு appeared first on Dinakaran.

Related Stories: