வானகரத்தில் பழைய இரும்பு மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் கிடங்கில் பயங்கர தீ விபத்து

சென்னை: சென்னையை அடுத்த வானகரத்தில் பழைய இரும்பு மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் கிடங்கில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் இரும்பு ராட்டினங்கள் தீயில் எரிந்து நாசமானது. பெட்ரோல் பங்க் அருகே பொருட்கள் தேக்கி வைக்கப்பட்டிருந்த பகுதியில் தீ விபத்து ஏற்பட்டது. 10 க்கும் மேற்பட்ட மதுரவாயல் தீயணைப்புத்துறையினர் ஓரு மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயை அனைத்து வருகின்றனர்.

மதுரவாயல் அருகே வானகரத்தில் தனியாருக்கு சொந்தமான குடோனில் தான் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சென்னை பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அருகே பெட்ரோல் பங்க் செயல்பட்டு வருகிறது. இந்த விபத்து பொருட்காட்சிகளுக்கு பயன்படுத்த கூடிய ராட்டினம், மிதக்கும் படகு, போன்ற பொருட்கள் தேக்கி வைக்கப்பட்டிருந்த இடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த குடோனில் இருந்து சிறியதாக புகை வந்துள்ளது. இதனைத்தொடர்ந்து தீ அதிகமாக பரவி அங்கிருக்கும் பொருட்கள் மீது தீ பற்றியது. உடனடியாக காவல்துறையினருக்கும், தீயணைப்புத்துறையினருக்கும் பொதுமக்கள் தகவல் அளித்தனர்.

பொதுமக்கள் அளித்த தகவலின்படி 10 க்கும் மேற்பட்ட மதுரவாயல் தீயணைப்புத்துறையினர் ஓரு மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயை அனைத்து வருகின்றனர். இந்த தீ விபத்தால் மதுரவாயல், வானகரம் ஆகிய இடங்களில் கரும்புகை சூழ்ந்து கருப்பு போர்வை போர்த்தியது போல காட்சியளிக்கிறது.

 

The post வானகரத்தில் பழைய இரும்பு மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் கிடங்கில் பயங்கர தீ விபத்து appeared first on Dinakaran.

Related Stories: