ஆன்லைன் ரம்மியில் ரூ.25 லட்சம் இழப்பு ஏட்டு தற்கொலை

தஞ்சாவூர்: ஆன்லைன் ரம்மியில் ரூ.25 லட்சம் இழந்த விரக்தியில் போலீஸ் ஏட்டு எலி மருந்து சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார். தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே உள்ள வெள்ளாம் பரம்பூரை சேர்ந்தவர் புகழேந்தி (45). மருவூர் காவல் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வந்த இவர், கடந்த 13ம் தேதி ஆலக்குடியில் உள்ள ஒரு தோப்பில் எலி மருந்து சாப்பிட்டதாக தஞ்சாவூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து நடுக்காவேரி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுபற்றி போலீசார் கூறுகையில்,‘புகழேந்தி ஆன்லைன் ரம்மி விளையாடி ரூ.25 லட்சம் வரை இழந்துள்ளார். இதனால் கடன் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகவே விரக்தியில் புகழேந்தி தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது,’என்றார்.

The post ஆன்லைன் ரம்மியில் ரூ.25 லட்சம் இழப்பு ஏட்டு தற்கொலை appeared first on Dinakaran.

Related Stories: