வெப்பத்தால் ஏற்படும் பாதிப்பு; சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தனி வார்டு அமைப்பு!

சென்னை: வெப்பத்தால் ஏற்படும் பாதிப்புகளுக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் அடுத்த 3 நாட்களுக்கு 109 டிகிரி பாரன்ஹீட் வெயில் சுட்டெரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் வடதமிழக உள் மாவட்டங்களில் இன்றும், நாளையும் வெப்ப அலை வீசும் என்றும் வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு 104 டிகிரி வரை வெயில் சுட்டெரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வெப்பத்தால் ஏற்படும் பாதிப்புகளுக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது. சென்னையில் கடும் வெப்பம் காரணமாக ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பால் கட்டுமான தொழிலாளி உயிரிழந்துள்ளார். சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி வேலு என்பவர் உயிரிழந்தார்.

நேற்று கடும் வெயிலில் பணி செய்த போது கால் மரத்துப்போன உணர்வு ஏற்பட்டதாக தகவல் தெரிவித்துள்ளனர். மேல்மலையனூரை சேர்ந்த அந்த கட்டுமான தொழிலாளிக்கு கல்லீரல், கணையம், சிறுநீரகம் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழ்நாட்டில் வெப்ப அலை காரணமாக கட்டட தொழிலாளி உயிரிழப்பு. உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த சச்சின் (25), மீஞ்சூர் பகுதியில் வேலை செய்து கொண்டிருக்கும் போது மயங்கி விழுந்தார். மேல் சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், நேற்றிரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

 

The post வெப்பத்தால் ஏற்படும் பாதிப்பு; சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தனி வார்டு அமைப்பு! appeared first on Dinakaran.

Related Stories: