குஜராத்: குவைத்தில் இருந்து டெல்லி வந்த இண்டிகோ விமானம் குஜராத் அகமதாபாத்தில் அவசர தரையிறக்கபட்டது. வெடிகுண்டு மிரட்டலை அடுத்து இண்டிகோ விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டு, பாதுகாப்பு படையினர் தீவிர சோதனை நடத்தினர். இண்டிகோ விமானத்தில் இருந்த பயணிகள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு, தீவிர சோதனை நடத்தப்பட்டது. இண்டிகோ விமானத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்தது.
