EPFO சம்பள உச்சவரம்பை ரூ.25,000 ஆக உயர்த்த ஒன்றிய அரசு ஆலோசனை என தகவல்

 

டெல்லி: EPFO சம்பள உச்சவரம்பை ரூ.25,000 ஆக உயர்த்த ஒன்றிய அரசு ஆலோசனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தொழிலாளர்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு EPFO எனப்படும் வருங்கால வைப்பு நிதி பிடித்தம் செய்யப்படுகிறது. அடிப்படை சம்பளம் மற்றும் அகவிலைப்படியில் சுமார் 12% வருங்கால வைப்பு நிதியாக தொழிலாளர்களின் ஊதியத்தில் இருந்து பிடித்தம் செய்யப்படுகிறது. இதே அளவு தொகையை நிறுவனங்களும் தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதியில் செலுத்துகின்றன.

தற்போது ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி கணக்கிற்குப் பங்களிக்கப்படும் கட்டாயச் சம்பள உச்சவரம்பு ரூ.15,000 ஆக உள்ளது. இந்நிலையில், இதை ரூ.25,000 ஆக உயர்த்த ஒன்றிய அரசு தீவிர ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு முன்பு 20 14-ம் ஆண்டு இந்த வரம்பு ரூ.6,500லிருந்து ரூ.15,000 ஆக உயர்த்தப்பட்டது. தற்போதைய மாற்றம் நடைமுறைக்கு வந்தால், குறைந்த ஊதியம் பெறுபவர்களுக்கு வருங்கால வைப்பு நிதி பிடித்தம் செய்யாமல் முழு தொகையும் கையில் கிடைக்கும்

இது ஊழியர்களுக்கு மகிழ்ச்சியை அளித்தாலும், அவர்களின் வருங்கால சேமிப்பு பாதிக்கப்படும் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது

Related Stories: