*முதல்வர் சந்திரபாபு நாயுடுவிடம் கோரிக்கை
சித்தூர் : சித்தூர் மாநகரத்தில் கடந்த ஆட்சியில் செயல்படுத்தப்படாத பல்வேறு வளர்ச்சி பணிகளை செய்ய வேண்டும் என்று முதல்வர் சந்திரபாபு நாயுடுவிடம் தெலுங்கு தேசம் கட்சி அலுவலக செயலாளர் கோரிக்கை விடுத்தார்.
அமராவதியில் உள்ள முதல்வர் அலுவலக வளாகத்தில் நேற்று சித்தூர் மாவட்ட தெலுங்கு தேச கட்சி அலுவலக செயலாளர் மோகன்ராஜ் முதல்வர் சந்திரபாபு நாயுடுவை மரியாதை நிமித்தமாக பூங்கொத்து கொடுத்து நேரில் சந்தித்து பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தார். இதற்கு முதல்வர் சந்திரபாபு நாயுடு அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றுவதாக உறுதி அளித்தார்.
பின்னர் தெலுங்கு தேச கட்சி அலுவலக செயலாளர் மோகன்ராஜ் கூறியதாவது: முதல்வர் சந்திரபாபு நாயுடுவிடம் சித்தூர் மாவட்டத்திற்கு பல்வேறு நலத்திட்ட பணிகள் செய்ய வேண்டும். கட்சிக்காக பாடுபட்ட அனைவருக்கும் நீதி வழங்க அனைத்து நடவடிக்கைகளும் எடுப்பேன் என உறுதியளித்தார்.
முதல்வர் சந்திரபாபு நாயுடு சித்தூர் மாவட்டத்தில் இந்த வார இறுதிக்குள் குப்பம் சட்டமன்றத் தொகுதியில் பல்வேறு நலத்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட வருகை தருகிறார். அதன் ஒரு பகுதியாக சித்தூர் மாநகரத்தில் கடந்த ஆட்சியில் செயல்படுத்தப்படாத பல்வேறு பணிகள் செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தேன்.
சித்தூர் மாநகரத்தில் நான்கு வழி சாலை, வீடு இல்லாதவர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா, வீடு கட்டி தர வேண்டும், சாலை வசதி, கழிவுநீர் கால்வாய் வசதி, குடிநீர் வசதி, மின்சார வசதி உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்தி தர வேண்டும் என கோரிக்கை வைத்தேன்.
உடனடியாக கோரிக்கையை நிறைவேற்றுவதாக உறுதி அளித்தார். அதேபோல் கட்சிக்காக பாடுபட்ட அனைவருக்கும் நீதி கிடைக்க நடவடிக்கை எடுப்பேன் என உறுதி அளித்தார். இவ்வாறு அவர் பேசினார்.
