சென்னை : ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதாகி புழல் சிறையில் உள்ள ரவுடி பொன்னை பாலுவுக்கு 5 நாட்கள் இடைக்கால ஜாமின் வழங்கி சென்னை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பொன்னை பாலுவின் தாய் இறந்துவிட்டதால், இறுதிச் சடங்கில் பங்கேற்க ஜாமின் கோரி அவர் நீதிமன்றத்தை அணுகியிருந்தார்.
