சென்னை: ரூ.307.24 கோடி மதிப்பீட்டில் புதிய குடியிருப்புகள் கட்டுமானப் பணி குறித்து அமைச்சர்கள் ஆய்வு செய்தனர். அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், மா.சுப்பிரமணியன் ஆகியோர் இன்று (30.1.2026) தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் சைதாப்பேட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கோட்டூர்புரம் திட்டப்பகுதியில் ரூ.307.24 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் 1800 புதிய அடுக்குமாடி குடியிருப்புகளின் கட்டுமான பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
தொடர்ந்து பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்களிடம் தற்காலிக ஊழியர்களின் போராட்டம் தொடர்பாக செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு; அரசு ஊழியங்களின் போராட்டங்களில் தற்காலிக ஊழியர்கள் பணி என்பது வருடத்திற்கு 11 மாதம் என்பது மட்டுமே. அது மீண்டும் தொடரும்போது இடையில் ஒரு நாள் விடுமுறை வழங்கி விட்டு மீண்டும் Renewel செய்யப்பட்டு பணிபுரிவார்கள். இவர்கள் பணியில் சேரும் போது Communual Roatation போன்ற பணிகள் எதுவும் இருக்காது. இதுபோன்று பணியில் இருப்பவர்களை எந்த அரசும் பணி நிரந்தரம் செய்ய முடியாது. தமிழ்நாடு மட்டுமல்ல இந்தியாவில் உள்ள வேறு எந்த மாநில அரசும் பணிநிரந்தரம் செய்ய முடியாது.
அண்ணாமலை அவர்களை வேறு மாநிலத்தில் பணிநிரந்தரம் செய்திருக்கிறார்களா என்று பத்திரிக்கையாளர்களாகிய நீங்களே கேட்டு சொல்லவும். பணிநிரந்தரம் செய்தால் நீதிமன்றம் தலையிடும். Communual rotation இல்லாமல் எந்த பணியாளரையும் பணிநிரந்தரம் செய்யக் கூடாது என்று நீதிமன்றம் கூறும். இந்த நிலையில் இதனை தெரிந்து கொண்டே போராட்டம் செய்வது என்பது ஒரு சிலர் தூண்டிவிட்டு நடத்துவது. அரசு ஊழியர் போராட்டம் அல்ல, இன்னொன்று ஊழியர் சங்கங்கள் அல்ல, தனிபநரின் தூண்டுதல் இருக்கிறது என்று ஏற்கெனவே நான் சொல்லியிருக்கிறேன். பெங்களுரைச் சேர்ந்த ஒருவர் இங்கு இருக்கும் VHN போராட்டத்தை தூண்டிவிட்டார், நாங்கள் அவர் மீது புகார் கொடுத்து இருக்கிறோம். இதுபோன்ற தூண்டுதல்களை மக்கள் ஏற்றுக் கொள்ளக்கூடாது. ஊழியர்கள் ஏற்றுக் கொள்ளக்கூடாது.
போராட்டங்கள் என்பது இயல்பாக நடக்க வேண்டும். தேர்தல் நடக்கும் சூழ்நிலையில் அரசிற்கு அழுத்தம் கொடுக்கும் நிலையில் இதுபோன்று தூண்டிவிடப்படும் போராட்டங்கள் குறைக்கப்பட வேண்டும் என்கின்ற நோக்கத்தில் சொல்லியிருந்தேனே தவிர போராட்டங்களை கொச்சைப்படுத்துவது என்பது திமுக அரசாங்கத்தின் நோக்கம் அல்ல. நான் இப்போது அரசியல்வாதியாக இருக்கலாம், இதற்கு முன்பு ஒரு யூனியன் தலைவராக இருந்து அரசியலுக்கு வந்திருக்கிறேன். 1980களிலே நான் ஏற்கெனவே சட்டமன்றத்தில் பதிவு செய்திருந்தேன். எம்ஜிஆர் முதலமைச்சராக இருந்தபோது அவரது அரசை எதிர்த்து தலைமைச் செயலகத்திலேயே போராட்டம் நடத்தி எம்ஜிஆர் அவர்களேயே கீழே வரவழைத்து 500 பெண் தொழிலாளர்கள் முன் பேச வைத்து அவருக்கு நேராக விவாதம் செய்தவன் நான். அதனால் தொழிற்சங்கத்தைப் பற்றி எனக்கு நன்றாக தெரியும்.
மத்திய இணை அமைச்சர் அவர்களின் குற்றச்சாட்டிற்கு பதில்; National Crime records Bureau (NCB) என்பது எந்தெந்த குற்றங்களுக்கு எத்தனை சதவிகிதம் அதாவது கொலைக் குற்றங்களாக இருந்தாலும், பாலியல் குற்றங்களாக இருந்தாலும் எந்தெந்த குற்றங்களுக்கு எந்த மாதிரியான சதவிகிதம் என்று பட்டியல் போட்டு சமூகநலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் சட்டமன்றத்தில் அண்மையில் தெரிவித்தார்கள். இந்தியா முழுமைக்கும் இருக்கின்ற 36 மாநிலங்களில் மிகக் குறைந்த அளவிலான குற்றச்செயல்கள் இருப்பது தமிழ்நாட்டில் தான் என்பது ஆதாரத்துடன் தெரிவித்திருக்கிறார். அதற்கெல்லாம் மறுப்பு தெரிவிப்பதற்கு அவர்களுக்கு தெரியாது. யாராக இருந்தாலும் பொது வெளியில் விவாதம் செய்வதற்கு தயாராக இருக்க வேண்டும்.
எந்தக் குற்றச் செயல்களாக இருந்தாலும் தமிழ்நாட்டிற்கும் மற்ற மாநிலங்களுக்கும் இடையே இருக்கின்ற வித்தியாசம், மிகக் குறைந்த அளவிலான குற்றச் செயல்கள் தமிழ்நாட்டில் இருக்கின்றது என்பது அனைவருக்கும் தெரியும். அவர்கள் தேர்தலுக்காக சொல்வது என்பது மக்கள் மத்தியில் எதுவும் எடுபடாது என்று மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை கூடுதல் தலைமைச் செயலாளர் காகர்லா உஷா, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண்மை இயக்குநர் ஸ்ரேயா பி. சிங் சென்னை மாநகராட்சியின் தெற்கு வட்டார துணை ஆணையாளர் அஃதாப் ரசூல் அடையார் மண்டல குழு தலைவர் ஆர்.துரைராஜ் தலைமை பொறியாளர்கள் வி.எஸ்.கிருஷ்ணசாமி, சு.லால் பகதூர், மேற்பார்வை பொறியாளர் ஆர்.பிரமிளா, நிர்வாக பொறியாளர் விஜய்ஆனந்த் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.
