மகாத்மா காந்தி படுகொலைக்கு காரணமானோரை ஆதரிக்கும் கட்சி பாஜ: அமைச்சர் மனோ தங்கராஜ் பேட்டி

 

கன்னியாகுமரி: மகாத்மா காந்தியின் 79வது நினைவு தினத்தையொட்டி கன்னியாகுமரியில் உள்ள காந்தி மண்டபத்தில் இன்று காலை காந்தி படத்திற்கு மாலை அணிவித்து தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: மகாத்மா காந்தி படுகொலைக்கு காரணமானவர்களை ஆதரிக்கும் பாஜகவை தமிழக மக்கள் புறக்கணிக்க வேண்டும்.

சமத்துவம், சமூகநீதி உள்ளிட்ட கொள்கையில் திமுகவுடன் காங்கிரஸ் சேர்ந்து நிற்கிறது. தமிழ்நாட்டின் உரிமைகளை பறிக்கும் நடவடிக்கையில் ஒன்றிய அரசு ஈடுபட்டபோது அதிமுக மற்றும் எடப்பாடி பழனிசாமி கைகட்டி வாய்மூடி காது கேளாமல் இருந்தார். அதிமுகவில் எந்த கொள்கையும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

 

Related Stories: