ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ரவுடி பொன்னை பாலுவுக்கு 5 நாள்கள் இடைக்கால ஜாமீன்

 

சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ரவுடி பொன்னை பாலுவுக்கு 5 நாள்கள் இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டது. பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஆண்டு அவரது வீட்டின் அருகே வெட்டிக் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் பிரபல ரவுடி நாகேந்திரன், அவருடைய மகன் அஸ்வத்தாமன் உள்ளிட்ட 29 பேர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்தது. இவர்களில், 27 பேர் கைது செய்யப்பட்டனர். இருவர் இதுவரை தலைமறைவாக உள்ளனர். இந்த நிலையில் இந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது.

சமீபத்தில் உடல்நிலை பாதிப்பு காரணமாக முக்கிய குற்றவாளி நாகேந்திரன் மரணம் அடைந்தார். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளான அஸ்வத்தாமன், அஞ்சலை உள்ளிட்ட 12 பேருக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இதனிடையே பொன்னை பாலுவின் தாய் இறந்துவிட்டதால், இறுதிச் சடங்கில் பங்கேற்க ஜாமீன் கோரி நீதிமன்றத்தை அணுகியிருந்தார். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதாகி புழல் சிறையில் உள்ள ரவுடி பொன்னை பாலுவுக்கு 5 நாட்கள் இடைக்கால ஜாமீன் வழங்கி சென்னை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories: