பொய்களை அவிழ்த்து விட்டு மக்களை ஏமாற்றும் மோடியின் முயற்சி தமிழகத்தில் எடுபடாது: வைகோ பேட்டி

மதுரை: இஷ்டத்துக்கு பொய்களை அவிழ்த்து விட்டு மக்களை ஏமாற்றுகின்ற மோடியின் முயற்சி தமிழ்நாட்டில் எடுபடாது என்று வைகோ தெரிவித்தார். மதுரையில் நேற்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, நிருபர்களிடம் கூறியதாவது: திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி எக்கு கோட்டை போல் உறுதியாகவும், பலமாகவும் உள்ளது. திமுக அரசு மக்களுக்கு தேவையான நல்ல திட்டங்களை வகுத்து 234 தொகுதிகளிலும் பிரசாரம் மேற்கொண்டு அனைவரையும் முந்திச் சென்று கொண்டிருக்கின்றது. திமுக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று திராவிட மாடல் ஆட்சியை 2026க்கு பின்னரும் தொடரும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. நமக்கு ஒதுக்கப்பட வேண்டிய நிதியை ஒதுக்காமல் மோடி அரசு தமிழ்நாட்டுக்கு ஓரவஞ்சகம் செய்து வருகிறது. பாஜ ஆளும் மாநிலங்களுக்கு மட்டும் நிதியை ஒதுக்குகிறது. சென்னைக்கு வந்த பிரதமர் மோடி தன் இஷ்டத்துக்கு பொய்களை அவிழ்த்து விட்டு நாட்டு மக்களை ஏமாற்றுகின்ற முயற்சி எடுபடாது. இவ்வாறு தெரிவித்தார்.

Related Stories: