மதுரை: செங்கோட்டையனை நினைத்து மிகவும் வருத்தப்படுகிறேன். எப்படி இருந்தவர் இப்படி ஆகி விட்டாரே என நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். மதுரையில் நேற்று பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், நிருபர்களிடம் கூறியதாவது: தமிழ்நாட்டில் கூட்டணி விவகாரங்களில் பாஜ தலைமை எப்போதும் தலையிடுவதில்லை. இங்கு கூட்டணிக்கு தலைமை எடப்பாடி பழனிசாமி தான். அவருடைய தலைமையில் தான் கூட்டணி பேச்சு வார்த்தைகள் நடந்தன. அதனால், கூட்டணி குறித்து செங்கோட்டையன் சொல்வது எந்த விதத்தில் சரியானது என தெரியவில்லை. செங்கோட்டையனை நினைத்து மிகவும் வருத்தப்படுகிறேன். எப்படி இருந்தவர் இப்படி ஆகி விட்டாரே என்றே தோன்றுகிறது. ஓ.பன்னீர்செல்வம் ஏற்கனவே எங்களோடு கூட்டணியில் இருந்தது உண்மை. இப்போது அவர் மீண்டும் வருவது குறித்து காலம் தான் பதில் சொல்லும். இவ்வாறு கூறினார்.
