விருதுநகர் எம்பி தேர்தலில் சூழ்ச்சியால் வீழ்த்தப்பட்டேன்: விஜயபிரபாகரன் ஓபன் டாக்

சிவகாசி: விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் நேற்று பிரேமலதா விஜயகாந்த் பிரசாரம் மேற்கொண்டார்.

அப்போது அவருடன் வந்த மகன் விஜயபிரபாகரன் பேசுகையில், ‘‘சிவகாசி எனக்கு ஒன்றும் புதிதல்ல. ஏற்கனவே இங்கே எம்பி தேர்தலில் 60 நாள் தங்கி பிரசாரம் செய்துள்ளேன். சிவகாசி மக்கள் இப்போதும் என்னை அன்பாக வரவேற்பதை காண முடிகிறது. தேர்தலில் வேண்டும் என்றால் நான் தோல்வி அடைந்திருக்கலாம். எம்பி தேர்தலில் கடுமையாக உழைத்தோம். இது மக்களாகிய உங்களுக்கு தெரியும். யார் வெற்றி பெற்றார் என்றும் தெரியும். எம்பி தேர்தலில் சிவகாசி தொகுதியில் தான் சில ஆயிரம் வாக்குகள் பின்னடைவு என்று கூறினர்.

ஏன் பின்னடைவு என்று இப்போது எனக்கு தெரிகிறது. தோல்வியின் சூழ்ச்சி என்னவென்று இப்போது எனக்கு தெரிகிறது. ஏன் இதை சொல்கிறேன் என்றால் 2006ல் சிவகாசி தொகுதியில் தான் தேமுதிக அதிகமான வாக்குகள் பெற்றது. 2024ல் ஏன் வாக்குகள் வரவில்லை என்றால் இப்போது எனக்குப் புரிகிறது. தேர்தல் பிரசாரத்தின் போது எத்தனையோ பட்டாசு தொழிலாளர்களை பார்த்து இருக்கிறேன். வாக்குறுதி கொடுத்திருக்கிறேன். மீண்டும் இந்த தொகுதியில் தேமுதிக உழைக்க தயாராக உள்ளது. தேர்தலில் தேமுதிக எந்த கூட்டணியில் இடம் பெறுகிறதோ அந்த கூட்டணி தான் ஆட்சி அமைக்கும். சிவகாசி மக்கள் என்னை எப்போதும் கைவிட மாட்டார்கள்’’ என்றார்.

Related Stories: